ஆப்நகரம்

வீடு இல்லாதவர்களுக்கு சூப்பர் நியூஸ்... மத்திய அரசு அறிவிப்பு!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 56,000 வீடுகளைக் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Samayam Tamil 23 Feb 2021, 9:00 pm
வீடற்ற ஏழைகளுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்குள் வீடு கட்டித் தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 43 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 73 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
Samayam Tamil house


2022ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகளைக் கட்டி முடிக்க இலக்கு உள்ளது. இத்திட்டத்தை தீவிரப்படுத்த தற்போது மத்திய கண்காணிப்புக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 56,368 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் நிர்ணயித்த காலத்தில் வீடுகளைக் கட்டி முடித்து பயனாளிகளுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எல்லாருக்கும் சம்பளம், PF, Gratuity மாறப்போகுது!!
லைட் ஹவுஸ் பிராஜெக்ட் மற்றும் டிமான்ஸ்ட்ரேசன் ஹவுசிங் பிராஜெக்ட் ஆகிய இரண்டு புதிய திட்டங்களையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி 2021 ஜனவரி 1ஆம் தேதி நாட்டினார். லைட் ஹவுஸ் பிராஜெக்ட் திட்டத்தின் கீழ் சென்னை, லக்னோ, ராஞ்சி, ராஜ்கோட், அகர்தாலா, இந்தூர் ஆகிய நகரங்களில் வீடுகள் கட்டப்படும். இத்திட்டத்தில் இணைவதற்கான ஆன்லைன் பதிவு முறையையும் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்