ஆப்நகரம்

கிரிப்டோகரன்சிக்கு புது ரூல்ஸ் - மத்திய வங்கி அதிரடி!

சிங்கப்பூர் மத்திய வங்கி கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை ஊக்குவிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 18 Jan 2022, 1:50 pm
சில்லறை முதலீட்டாளர்களை அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கிரிப்டோகரன்சி வர்த்தக சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்துவதை கட்டுப்படுத்தும் வழிகாட்டுதல்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) திங்களன்று வெளியிட்டுள்ளது.
Samayam Tamil crypto update


மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி நிறுவனங்களுக்கு தெளிவான ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டு சூழல்கள் சாதகமாக உள்ளதால் எந்த சிக்கல்களும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கிரிப்டோகரன்சி நிறுவங்களுக்கு முறையான உரிம கட்டமைப்புகளை உருவாக்குவதில் உலக அளவில் சிங்கப்பூர் சிறந்த முன்னோடியாகவும் உள்ளது.

ஆனால் சிங்கப்பூர் நகர-மாநில அதிகாரிகள் டிஜிட்டல் பேமெண்ட் டோக்கன்கள் (DPT) அல்லது கிரிப்டோகரன்சியில் வர்த்தகம் செய்வது மிகவும் ஆபத்தானது மற்றும் பொதுமக்களுக்கு ஏற்றதல்ல என தொடந்து எச்சரித்து வருகின்றனர்.

சொந்த கிரிப்டோகரன்சியை வெளியிடும் வால்மார்ட்!
புதிய வழிகாட்டுதல்களின் படி, சிங்கப்பூரில் உள்ள பொதுப் பகுதிகளில் DPT (digital payment tokens) சேவைகளை சந்தைப்படுத்துதல், விளம்பரப்படுத்துதல் அல்லது பொதுமக்களுக்கு DPT சேவைகளை சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் போன்றவற்றில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்துள்ளது.

40 கோடி டாலர் கிரிப்டோகரன்சி காலி.. மோசடியில் ஈடுபட்ட ஹேக்கர்கள்!
கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி அறிவிப்புகள் குறித்து அதன் சொந்த வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் மட்டுமே விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்துதலை செய்ய வேண்டும் எனவும் சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்