ஆப்நகரம்

எலெக்ட்ரிக் வாகனம்: இந்தியாவில் வரிசை கட்டும் மின்சார வாகனங்கள்!

இந்தியாவில் மூன்று ஆண்டுகளில் 2.56 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 22 Mar 2023, 11:51 am
மின்சார வாகனங்கள்!
Samayam Tamil EV


இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையேற்றம், புகை மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மின்சார வாகனப் பயன்பாட்டுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதில் எரிபொருள் செலவு குறைவு என்பதோடு, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதால் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

அரசின் உதவி!

அரசு தரப்பிலிருந்தும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து மானிய உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, வாகனப் பதிவு நடைமுறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாகனங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

வாகனப் பதிவு!

மின்சார வாகனங்களுக்கான பதிவு குறித்து நேற்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கனரக தொழில் துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் 15ஆம் தேதி வரை இந்தியாவில் 2,56,980 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு மொத்தம் 1,23,092 மின்சார வாகனங்களும், 2021ஆம் ஆண்டு 3, 27, 976 மின்சார வாகனங்களும், 2022ஆம் ஆண்டு 10,15,196 மின்சார வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பறந்து விரியும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம்.. ஈரோட்டில் புதிய கிளை திறப்பு!
சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கனரக தொழில் துறை சார்பில் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு 3 திட்டங்களின் கீழ் ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக கனரக தொழில் துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜால் தனது பதிலில் தெரிவித்தார்.

வாகனப் பதிவு பட்டியல்:

2020ஆம் ஆண்டு - 1,23,092 வாகனங்கள்

2021ஆம் ஆண்டு - 3,27,976 வாகனங்கள்

2022ஆம் ஆண்டு - 10,15,196 வாகனங்கள்

2023 ஆம் ஆண்டு - 2,56,980 வாகனங்கள்

தமிழ்நாடு மின்வாகன கொள்கை ரெடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

அதிகரிக்கும் எண்ணிக்கை!

இந்தியாவில் மின்சார வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல பல்வேறு அம்சங்களுடன் புதிய வடிவிலான மின்சார வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அதேபோல, புதிய நிறுவனங்களும் இந்தச் சந்தையில் தடம் பதித்து வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் இப்போது 13 லட்சத்துக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்