ஆப்நகரம்

பென்சன் திட்டத்தில் இத்தனை பேரா? அடேங்கப்பா.. கலக்கும் அடல் பென்சன் யோஜனா!

அடல் பென்சன் திட்டத்தின் கீழ் 5.20 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 27 Apr 2023, 5:40 pm
மத்திய மோடி அரசின் லட்சியத் திட்டமான அடல் பென்சன் யோஜனா (APY) திட்டத்தில் நீங்களும் முதலீடு செய்திருந்தால் அது தொடர்பாக புதிய அப்டேட் வந்துள்ளது. புதிய அப்டேட்டின் கீழ், அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 5.20 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். அதாவது, 2023 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்ப்டி, அடல் பென்சன் திட்டத்தின் கீழ் சேர்க்கை 5.20 கோடிப் பேர் பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil pension


கடந்த 2022-23 நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ், பதிவு செய்திருந்தனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும். அடல் பென்சன் திட்டத்தில் மேலாண்மையின் கீழ் இதுவரை மொத்த சொத்து மதிப்பு ரூ. 27,200 கோடியாக உள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 8.69 சதவீதம் முதலீட்டு லாபம் ஈட்டப்பட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் 9 வங்கிகள் ஆண்டு இலக்கை எட்டியுள்ளன. பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளின் ஒரு கிளைக்கு 100க்கும் மேற்பட்ட அடல் பென்சன் திட்டக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிராந்திய ஊரக வங்கிகளில் 32 வங்கிகள் ஆண்டு இலக்கை அடைந்துள்ளன. ஜார்க்கண்ட் ராஜ்ஜிய கிராமிய வங்கி, விதர்பா கொங்கன் கிராமிய வங்கி, திரிபுரா கிராமிய வங்கி, பரோடா உத்தரப்பிரதேச கிராமிய வங்கி ஆகியவற்றின் ஒரு கிளைக்கு 160க்கும் மேற்பட்ட அடல் பென்சன் திட்டக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, தனலட்சுமி வங்கி, ஏர்டெல் பேமண்ட் வங்கி ஆகியவை நிதியமைச்சகம் விதித்த ஆண்டு இலக்கை எட்டியுள்ளன. மேலும், பீகார், ஜார்க்கண்ட், அசாம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், சதீஷ்கர். ஒடிசா, உத்தராகண்ட் ஆகிய 12 மாநிலங்கள் தங்களுடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் உதவியுடன் ஆண்டு இலக்கை அடைந்துள்ளன. இந்த புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்