ஆப்நகரம்

வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புமா இந்தியப் பொருளாதாரம்?

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.7 சதவீதம் வளர்ச்சி காணும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Jun 2021, 5:12 pm
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி - இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதையடுத்து இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதால் இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
Samayam Tamil economy


நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகளும் ஊரடங்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஆனாலும் பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.7 சதவீத வளர்ச்சியைச் சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த மதிப்பீட்டறிக்கையில் இந்தியா 11.1 சதவீத வளர்ச்சியைச் சந்திக்கும் என்று கூறியிருந்தது.

2 ரூபாய் இருக்கா? 5 லட்சத்தை அள்ளிட்டு போங்க!
கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைத் தொடர்ந்து மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தனது மதிப்பீட்டை இவ்வாறு குறைத்துள்ளது. எனினும், அடுத்த 2022-23 நிதியாண்டில் இந்தியா 5.4 சதவீத வளர்ச்சியைச் சந்திக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான அறிவிப்பில் 4 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்