ஆப்நகரம்

வாட் வரி இவ்வளவு குறைப்பா; அரசின் நல்ல மனசால் மளமளவென குறைந்த பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

TNN 14 Oct 2017, 5:51 am
போபால்: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
Samayam Tamil mp govt reduced the vat for petrol and diesel
வாட் வரி இவ்வளவு குறைப்பா; அரசின் நல்ல மனசால் மளமளவென குறைந்த பெட்ரோல், டீசல் விலை!


பெட்ரோல், டீசல் மீதான விலையை, எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் மாதம் இருமுறை என்றிருந்த நடைமுறை, நாள்தோறும் என மாற்றப்பட்டது.

ஆனால் மாநில அரசின் வாட், கூடுதல் வரிகளால் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து ஏறுமுகமே சென்று வருகிறது. ஒருகட்டத்தில் பொதுமக்களால் பயன்படுத்த இயலாத அளவிற்கு எரிபொருட்கள் சென்றுவிடும் என்று அஞ்சத் தோன்றியது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநில அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்துள்ளது. அதாவது, பெட்ரோலுக்கு 3%, டீசலுக்கு 5% என வரி குறைக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெட்ரோல் மீதான கூடுதல் வரி ரூ.1.50ம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பெட்ரோல் விலையில் ரூ.1.70ம், டீசல் விலையில் ரூ.4ம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MP Govt reduced the VAT for petrol and diesel.

அடுத்த செய்தி

டிரெண்டிங்