ஆப்நகரம்

விளம்பர வருவாய்: தோனி ஓய்வு பெற்றாலும் மதிப்பு குறையாது!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள தோனிக்கு பிராண்டு மதிப்பு குறையவில்லை என்று பல்வேறு நிறுவனங்கள் கூறியுள்ளன.

Samayam Tamil 17 Aug 2020, 12:34 pm
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் எனவும், சிறந்த பினிசர் எனவும் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். கொரோனா எப்போது ஒழியும் என்ற கேள்வியை விட தோனி எப்போது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்ற் கேள்வி பல்வேரு தரப்புகளில் இருந்தது. அதற்கு விடையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். எனினும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்பதால் அவரது ரசிகர்கள் ஓரளவுக்கு ஆறுதல் அடைந்துள்ளனர். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது சந்தை மதிப்பு சற்றும் குறையவில்லை.
Samayam Tamil Dhoni


பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ள மகேந்திர சிங் தோனி அதன் மூலம் நல்ல வருவாயும் ஈட்டியுள்ளார். அவர் தனது கேப்டன் பதவியை இழந்த பின்னரும், இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தோல்வியடைந்து வெளியேறிய பின்னரும் கூட தோனியின் மவுசு குறையவில்லை. விளம்பர வாய்ப்புகள் தொடர்ந்து அவருக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. தோனி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பின்னர் இண்டிகோ, அமுல், கே.எஃப்.சி., மேன்ஃபோர்ஸ் காண்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தோனிக்கு ஆறுதல் தெரிவித்துள்ளன. ஹெல்காப்டர் தரையிறங்கிவிட்டது என்று இண்டிகோ நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

Gold rate in chennai: நகை வாங்கப் போறீங்களா... சூப்பர் நியூஸ்!

தோனியின் அதிரடியான ஷாட்களை மிஸ் பண்ணப்போறோம் என்று மேன்ஃபோர்ஸ் காண்டம்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. தோனியை மிஸ் பண்ணுவதாக கேஎஃப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பேடிஎம், ஜொமாடோ, கோ ஏர் உள்ளிட்ட நிறுவனங்களும் தோனி குறித்துப் பேசியுள்ளன. விளம்பர வருவாயைப் பொறுத்தவரையில், சென்ற ஆண்டில் தோனியின் பிராண்டு மதிப்பு 41.2 மில்லியன் டாலராக இருந்தது. உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பின்னரும் அவரது பிராண்டு மதிப்பு அதிகமாகவே இருந்தது.

Share Market: இன்று ஹாட் ஸ்டாக்ஸ்... எதை வாங்கினால் லாபம்?

பிராண்டு மதிப்பு அடிப்படையில் 2018ஆம் ஆண்டில் 12ஆவது இடத்தில் இருந்த தோனி, 2019ஆம் ஆண்டில் 8ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தார். அதே நேரம் பிராண்டு மதிப்பில் சச்சின் டெண்டுல்கர் கூட 15ஆவது இடத்தில்தான் இருக்கிறார். அவரது பிராண்டு மதிப்பு 25 மில்லியன் டாலராக இருந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 238 மில்லியன் டாலர் பிராண்டு மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்