ஆப்நகரம்

கொரோனாவுக்கு விலை கொடுத்த அம்பானி!

கொரோனா நிவாரண நிதியாக ரூ.500 கோடியை முகேஷ் அம்பானி பிரதமரின் அவசர கால நிதியில் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 31 Mar 2020, 2:11 pm
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரையில் 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் அரசு தரப்பிலிருந்து தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களுக்கு பொருளாதார ரீதியாக சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் தொழில் துறை தரப்பிலிருந்தும் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil முகேஷ் அம்பானி


தொழிலதிபர்களும், தொழில் நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தன் பங்குக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.500 கோடியை வழங்கியுள்ளார். பிரதமரின் அவசர கால நிதிக் கணக்கில் இத்தொகையை முகேஷ் அம்பானி செலுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல், கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களுக்கும் தலா ரூ.5 கோடியை அம்பானி வழங்கியிருக்கிறார்.

தங்கம் விலை: தொடர் சரிவில் தங்கம்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு உதவிகளும் ஆதரவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மும்பையில் 100 படுக்கைகள் அடங்கிய சிறப்பு மருத்துவமனை ஒன்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக கொரோனா பாதித்தவர்களுக்காகவே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தினமும் 1 லட்சம் முகக் கவசம், 50 லட்சம் பேருக்கு இலவச உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.

பெட்ரோல் விலை: ஊர் மட்டும் அடங்கல, இதுவும் தான்!

இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனாவை எதிர்ப்பதில் தேவையைப் பொறுத்து அனைத்து உதவிகளையும் ரிலையன்ஸ் நிறுவனமும் அதன் உறுப்பினர்களும் செய்வார்கள். கொரோனாவுக்கான பிரத்தியேகமான மருத்துவமனையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைத்துத் தந்தது. கொரோனாவை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்