ஆப்நகரம்

சம்பளமே வேண்டாம்! அம்பானியின் நல்ல மனம்!

சென்ற நிதியாண்டுக்கான சம்பளம் முழுவதையும் கொரோனா பிரச்சினைகளுக்காக நிராகரித்துள்ளார் முகேஷ் அம்பானி.

Samayam Tamil 3 Jun 2021, 4:16 pm
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் திக்குமுக்காடி வருகின்றனர். கொரோனா பாதிப்பு தொடங்கி ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையிலும் கொரோனாவின் கோரத் தாண்டவம் ஓயவில்லை. பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பலருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் நிறுவனங்கள் தரப்பிலிருந்து உழைப்பில்லா ஊதியம், காப்பீடு போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil ambani


கார்பரேட் நிறுவனங்களும் தங்களால் முடிந்த நிதியுதவியை கொரோனா நிவாரணத்துக்காக வழங்கி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் உதவிக் கரம் நீட்டி வருகிறது. முகேஷ் அம்பானியோ தனது ஒரு வருட சம்பளத்தையே கொரோனா நிவாரணத்துக்காக வழங்கியுள்ளார். அதாவது, 2020-21 நிதியாண்டுக்கான முழுச் சம்பளத்தையும் அவர் வாங்கவில்லை. ரூ.15 கோடியை அவர் நிராகரித்துள்ளார்.

ஜூன் 30க்குள் இதை இணைக்கலனா ஆபத்து! SBI எச்சரிக்கை!
கடந்த 11 வருடங்களாகவே முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் தற்போது கொரோனா பிரச்சினைகளை முன்னிட்டு அவர் சம்பளம் வாங்கவில்லை. அம்பானி சம்பளம் வாங்காத நிலையில் அவரது உறவினர்களான நிகில் மெஸ்வானி மற்றும் ஹிடால் மெஸ்வானி தலா ரூ.24 கோடி சம்பளம் பெற்றுள்ளனர். நிறுவனத்தின் செயலாக்க இயக்குநர்களான பிரசாத் மற்றும் பவன் குமார் முறையே ரூ.11.99 கோடி, ரூ.11.15 கோடி பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்