ஆப்நகரம்

1199 ரூபாய்க்கு விமான டிக்கெட்.. ஃப்ளைட்டில் பயணிக்க சூப்பர் ஆஃபர்!

1199 ரூபாய் கட்டணத்தில் விமான டிக்கெட் சலுகையை அறிவித்துள்ளது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 Jan 2023, 5:17 pm
விமான பயணங்களை திட்டமிடுவோர், குறிப்பாக சுற்றுலா செல்ல திட்டமிடுவோருக்கு ஒரு அற்புதமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்லைன் நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் (Go First) நடப்பு ஆண்டுக்கு ட்ராவல் இந்தியா ட்ராவல் (Travel India Travel) என்ற புதிய சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.
Samayam Tamil Go first
Go first


நேற்று (ஜனவரி 16) முதல் இந்த விமான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி முடிவடையும் இந்த விற்பனையில் மிக குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்யலாம் என கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில், வெறும் 1199 ரூபாய் முதல் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்யலாம் என கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச பயணங்களுக்கு 6599 ரூபாய் முதல் டிக்கெட் புக்கிங் செய்யலாம் எனவும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு தேவையான தேதியில் விமான டிக்கெட்டை சலுகை கட்டணத்தில் புக்கிங் செய்துகொள்ளலாம். ஆனால், ஜனவரி 19ஆம் தேதிக்குள் டிக்கெட்டை புக்கிங் செய்துவிட வேண்டும்.

ஏடிஎம்க்கு போனாலே அபராதம் கட்டணும்.. இதை பற்றி தெரியுமா?
முக்கிய தகவல்கள்:

  • டிக்கெட் முன்பதிவு காலம் - ஜனவரி 19ஆம் தேதி வரை.

  • விமான பயணக் காலம் - பிப்ரவரி 4 முதல் செப்டம்பர் 30 வரை.

  • விமான டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். விமானம் புறப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் கேன்சல் செய்தால் கட்டணம் கிடையாது.

  • டிக்கெட் புக் செய்துவிட்டு பயண தேதி அன்று பயணி வரவில்லை என்றால் பணம் திருப்பி தரப்படாது.

  • இந்த சலுகையை வேறு எந்தவொரு சலுகையுடனும் சேர்த்து கூடுதல் தள்ளுபடி பெற முடியாது.

  • சலுகை விலையில் இருந்து கூடுதல் தள்ளுபடி வழங்கப்படாது.

  • நேரடி விமானங்களுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்.


எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்