ஆப்நகரம்

Mutual Fund Rules: மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகள் மாற்றம்.. புதிய ரூல்ஸ் இவைதான்!

இன்று முதல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jul 2022, 2:58 pm
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கான விதிமுறைகள் இன்று (ஜூலை 1) முதல் மாற்றப்பட்டுள்ளன. இதுவரையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் ட்ரேடிங் கணக்கில் (Trading account) இருந்து பணம் எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது.
Samayam Tamil mutual funds


இப்படி ஒவ்வொரு முதலீட்டாளரின் பணமும் ஒன்றுதிரட்டப்பட்டு ஒட்டுமொத்தமாக முதலீடு செய்யப்படும். பின்னர், லாபம் உள்ளிட்ட பலன்கள் மொத்தமாக ட்ரேடிங் கணக்கிலேயே செலுத்தப்பட்டுவிடும். இதுவரை இப்படித்தான் நடைமுறையில் இருந்தது.

ஜூலை 1ஆம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகளை செபி திருத்தியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் ட்ரேடிங் கணக்கிற்கு பதிலாக வங்கிக் கணக்கில் இருந்தே நேரடியாக பணம் செலுத்தப்படும்.

Gold Import Tax: தங்கம் விலை உயர இதுதான் காரணம்!
இந்த தொகை சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பின்னர் அத்தொகை முதலீடுக்கு பயன்படுத்தப்படும். மியூச்சுவல் ஃபண்டை ரெடீம் செய்யும்போது லாபம் உள்ளிட்ட பலன்கள் நேரடியாக முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

சுருக்கமாக சொன்னால், இனி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு ட்ரேடிங் கணக்கு பயன்படாது. மாறாக, வங்கிக் கணக்கு நேரடியாக பயன்படுத்தப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்