ஆப்நகரம்

பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி.. காரணம் இதுதான்!

நாமக்கல்லில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.5 கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 10 Aug 2022, 2:46 pm
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், துறையூர், கொளக்குடி, முசிறி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3000 பருத்தி முட்டைகளை விற்பனை கொண்டு வந்திருந்தனர்.
Samayam Tamil cotton


இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் விலையாக குவிண்டாலுக்கு ரூ. 9311 முதல் ரூ. 11375 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.10699 முதல் ரூ.11915 வரையிலும், கொட்டு ரகம் குவிண்டால் 3499 ரூபாய் முதல் 9599 ரூபாய் வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 3000 மூட்டைகள் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பருத்தி விலை குவிண்டாலுக்கு 2,000 வரை உயர்ந்தது. ஆகஸ்ட் ஆம் தேதி நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3300 பருத்தி முட்டைகளை விற்பனை கொண்டு வந்தனர்.

பருத்தி விலை மீண்டும் உயர்வு.. செம குஷியில் விவசாயிகள்!
இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் விலையாக குவிண்டாலுக்கு ரூ. 8699 முதல் ரூ. 10899 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ. 10050 முதல் ரூ.11399 வரையிலும், கொட்டு ரகம் குவிண்டால் 3699 ரூபாய் முதல் 8699 ரூபாய் வரையிலும் விற்பனையானது. அந்த ஏலத்தில் 3300 மூட்டைகள் ரூ.1.10 கோடிக்கு ஏலம் போனது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்