ஆப்நகரம்

ஆபீஸ் வரவேண்டாம்.. வெளிய போங்க.. ஊழியர்களை விரட்டிய ஆட்டோமொபைல் நிறுவனம்!

500 பேரை வேலையை விட்டு நீக்குவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 2 Mar 2023, 2:54 pm
பிரபல ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் (GM) நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் இதன் போட்டியாளர்கள் உட்பட மற்ற பெரிய நிறுவனங்களின் வழியில் பணத்தைச் சேமிப்பதற்கும் லாபத்தை அதிகரிப்பதற்கும் பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணி நீக்கத்தை, நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகளில் சுமார் 500 பேர் வேலையை விட்டு நீக்கப்படுகின்றனர்.
Samayam Tamil layoff


ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி (CEO) மேரி பார்ரா மற்றும் தலைமை நிதியதிகாரி (CFO) பால் ஜேக்கப்சன் ஆகியோர் முதலீட்டாளர்களிடம் நிறுவனம் எந்த பணிநீக்கத்தையும் திட்டமிடவில்லை என்று கூறியிருந்த நிலையில், தற்போது பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தலைமை மனிதவள பிரிவு அதிகாரி ஆர்டன் ஹோப்மன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் செலவை மிச்சப்படுத்த வேண்டும் என்ற நிறுவனத்தின் இலக்கை உறுதிப்படுத்தியுள்ளார். அதன் ஒரு நடவடிக்கையாகவே பணி நீக்கம் செய்யப்படுகிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத் தயாரிப்புகள் அனைத்திலும் பெருநிறுவன செலவுகள், மேல்நிலை மற்றும் சிக்கலான தன்மையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை குறைத்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட அறிக்கையில், இந்த பணி நீக்கங்கள் செயல்திறனின் விளைவு என்றும், தங்களுடைய ஒட்டுமொத்த கட்டமைப்புச் செலவுக் குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக அட்ரிஷன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்!

இதற்கிடையில், அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐரோப்பாவில் 3,800 பேரை நீக்குவதாக அறிவித்தது. அதன் வணிகத்தை மறுசீரமைப்பதற்காகவும், போட்டி செலவு கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும் இந்த அதிரடி முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல நிறைய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகக் கொத்துக் கொத்தாகத் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்தியாவிலும் தற்போது பணி நீக்கங்கள் அதிகமாக உள்ளன. இதனால் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்