ஆப்நகரம்

வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்தே சாப்பிடலாம்... இது சூப்பர் பாலிசி!

எல்.ஐ.சி. நிறுவனத்தின் இந்த பாலிசி திட்டத்தில் ஒரே பிரிமியம் செலுத்தி வாழ்நாள் முழுவதும் 9000 ரூபாய் பென்சன் வாங்கலாம்.

Samayam Tamil 28 Nov 2021, 10:08 pm
கொரோனா வந்த பிறகு யாருக்கு என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு எதிர்காலத்தின் மீது நிறையப் பேருக்கு அச்சம் உள்ளது. இதுபோன்ற சமயங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்வது? அதற்கு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். அதுவும் இறுதிக் காலத்தில் நமது செலவுகளை நாமே பார்த்துக்கொள்ளும் அளவுக்கு கைவசம் நிதி ஆதாரம் இருக்க வேண்டும். அதற்கு இப்போதே நாம் தயாராக இருக்க வேண்டும்.
Samayam Tamil LIC


பென்சன் என்ற பெயரில் ஒரு நிலையான தொகை ஒவ்வொரு மாதமும் வந்துகொண்டிருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும் அல்லவா? அப்பப்பட்ட நிறைய திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் எல்.ஐ.சி. ஜீவன் அக்‌ஷய் பாலிசி திட்டம். இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒரேயொரு பிரீமியம் செலுத்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் மாதத்துக்கு 9,000 ரூபாய் பென்சன் பெற முடியும்.

இந்த பாலிசி வாங்குவதற்கு குறைந்தபட்ச வயது 30 ஆண்டுகள். அதிகபட்சமாக 85 வயது வரையில் இந்த பாலிசியை வாங்கலாம். இந்தியக் குடிமகன் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தப் பாலிசியை வாங்கிப் பயன்பெறலாம்.நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. ஒரு வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரையில் உங்களுக்கு பென்சன் கிடைக்கும்.

75 வயது நிரம்பிய ஒருவர் இந்த பாலிசியை வாங்குவதாக இருந்தால் அவர் உத்தரவாதப் பணமாக ரூ.9 லட்சம் பெறுவதாக இருந்தால் அவர் ஒரே பிரீமியம் தொகையாக ரூ.9,16,200 செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் உடனடியாக அவர் பென்சன் வாங்க முடியும். அவருக்கு மாதத்துக்கு ரூ.9,011 என்ற அளவில் பென்சன் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்