ஆப்நகரம்

வருமான வரி வசூல் 17% உயர்வு.. மத்திய அரசின் வருவாய் எவ்வளவு தெரியுமா?

2023 மார்ச் 10ஆம் தேதி வரை நிகர நேரடி வரி வசூல் 17% அதிகரித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 12 Mar 2023, 1:25 pm
நடப்பு 2023-24ஆம் நிதியாண்டு வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இதுவரை மட்டும் நிகர நேரடி வரி வசூல் (Net Direct tax collection) 17% அதிகரித்து 13.73 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) தெரிவித்துள்ளது.
Samayam Tamil cash
cash


மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவரை மொத்த நேரடி வரி வசூல் (Gross Direct tax collection) 22.58% அதிகரித்து 16.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.

நேரடி வரி என்பதில் தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வரி ஆகிய இரண்டும் அடங்கும். இந்த முறை தனிநபர் வருமான வரி வசூல் உயர்ந்ததாலேயே நேரடி வரி வசூல் அளவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2023 மார்ச் 10ஆம் தேதி வரை 2.95 லட்சம் கோடி ரூபாய் ரீஃபண்ட் தொகை செலுத்தப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டை காட்டிலும் ரீஃபண்ட் தொகை 59.44% அதிகரித்துள்ளது. ரீஃபண்ட் தொகை போக நிகர நேரடி வரி வசூல் 13.73 லட்சம் ரூபாயாக உள்ளது.

பட்ஜெட் மதிப்பீட்டில் 96.67% தொகையும், திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் 83.19% தொகையும் வசூலாகியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரீஃபண்ட் தொகை போக மீதமுள்ள நிகர நேரடி வரி வருவாயில் கார்ப்பரேட் வருமான வரி வசூல் வளர்ச்சி 13.62% ஆகவும், தனிநபர் வருமான வரி மற்றும் செக்யூரிட்டிஸ் பரிவர்த்தனை வரி வசூல் வளர்ச்சி 20.06% ஆகவும் இருக்கிறது.

மொத்த நேரடி வரி வசூலில் கார்ப்பரேட் வருமான வரி வசூல் வளர்ச்சி 18.08% ஆகவும், தனிநபர் வருமான வரி மற்றும் செக்யூரிட்டிஸ் பரிவர்த்தனை வரி வசூல் வளர்ச்சி 27.57% ஆகவும் இருக்கிறது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்