ஆப்நகரம்

Netflix: குறைந்த கட்டணத்தில் பிளான்.. நெட்ஃபிளிக்ஸ் கொடுக்கும் சர்பிரைஸ்!

குறைந்த கட்டணத்தில் விளம்பரங்கள் கொண்ட பிளானை நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.

Samayam Tamil 26 Jun 2022, 3:18 pm
உலகளவில் ஓடிடி துறையில் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) முன்னிலையில் உள்ளது. ஆனால் சமீப காலமாக நெட்ஃபிளிக்ஸ் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பத்து ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக நெட்ஃபிளிக்ஸ் தனது சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளதாக கடந்த காலாண்டு அறிக்கையில் தெரிவித்தது.
Samayam Tamil Netflix


நடப்பு காலாண்டில் உலகளவில் 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழக்கக்கூடும் என நெட்ஃபிளிக்ஸ் மதிப்பிட்டுள்ளது. இதனால் நெட்ஃபிளிக்ஸ் பங்கு விலை கடுமையாக சரிந்தது. வருவாய் வேகம் குறைந்துள்ள நிலையில், செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களையும் குறைத்துள்ளது நெட்ஃபிளிக்ஸ்.

இந்நிலையில், வருவாயை பெருக்குவதற்காக விளம்பரங்கள் கொண்ட விலை குறைவான பிளான்களை அறிமுகப்படுத்துவதற்கு நெட்ஃபிளிக்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தனியாக ஒரு பிளான் அறிமுகப்படுத்தப்பட்டு அதில் விளம்பரங்கள் கொண்டுவரப்படும். இதன் கட்டணமும் குறைவாக இருக்கும்.

Netflix: என்ன இப்படி செஞ்சிட்டிங்க.. நெட்ஃபிளிக்ஸ் செயலால் பீதி!
மற்ற பிளான்களில் எப்போதும் போல விளம்பரங்கள் இருக்காது. இதுகுறித்து நெட்ஃபிளிக்ஸ் துணை CEO டெட் சரண்டோஸ், “நெட்ஃபிளிக்ஸ் பிளான்களில் இப்போது விளம்பரங்கள் கொண்டுவரப்படாது. குறைந்த கட்டணத்தில் பிளான் வேண்டும், நாங்கள் விளம்பரங்களையும் பார்க்கிறோம் என்பவர்களுக்காக தனியாக பிளான் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் குறைந்த கட்டண பிளானில் விளம்பரங்களை கொண்டு வருவதற்காக கூகுள், என்பிசி யூனிவர்சல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்