ஆப்நகரம்

Netflix: என்ன இப்படி செஞ்சிட்டிங்க.. நெட்ஃபிளிக்ஸ் செயலால் பீதி!

Netflix Layoffs: செலவுகளை குறைப்பதற்காக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 300 ஊழியர்களை வெளியேற்றியுள்ளது.

Samayam Tamil 24 Jun 2022, 8:50 am
ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தனது செலவுகளை குறைப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக முதற்கட்டமாக கடந்த மாதமே நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 150 ஊழியர்களை வெளியேற்றி வேலைவாய்ப்புகளை குறைத்தது.
Samayam Tamil Netflix


இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 300 ஊழியர்களை வெளியேற்றியுள்ளது. அதாவது நெட்ஃப்ளிக்ஸ் தனது ஊழியர்களில் 4% பேரை குறைத்துள்ளது. இதனால் மேற்கொண்டு ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்களோ என நெட்ஃப்ளிக்ஸ் ஊழியர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது. அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை நெட்ஃப்ளிக்ஸ் இழந்ததால் அதன் பங்கு விலை சரிந்தது.

விஸ்வரூபம் எடுக்கும் HDFC Bank.. போருக்கு தயாராகும் SBI..!
இதையடுத்து, வருமானத்தை பெருக்கவும், செலவுகளை குறைக்கவும் நெட்ஃப்ளிக்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் செலவுகளை குறைப்பதற்காக இதுவரை மொத்ஹ்டம் 450 ஊழியர்களை நெட்ஃப்ளிக்ஸ் வெளியேற்றியுள்ளது.

இதுகுறித்து நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் நிலையில், வருவாய் வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதாலும், செலவுகளை குறைப்பதற்காகவும் சில மாற்றங்களை செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்