ஆப்நகரம்

Work From Home: நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை.. வருகிறது புதிய சட்டம்!

வீட்டில் இருந்து வேலை செய்வதை சட்ட உரிமையாக்குவதற்கு புதிய சட்டத்தை நிறைவேற்ற உள்ளது நெதர்லாந்து.

Samayam Tamil 26 Jun 2022, 11:30 am
2020ஆம் ஆண்டு கொரோனா நெருக்கடி காலம் தொடங்கியபோது உலகம் முழுவதும் ஏராளமான ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தனர். பின்னர் கொரோனா தாக்கம் தணிந்தபின்பு அலுவலகங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு ஊழியர்கள் அலுவலக வேலைக்கு திரும்பினர்.
Samayam Tamil Work From Home


இருப்பினும், இன்னும் பல நிறுவனங்களில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, மேற்கு நாடுகளில் ஊழியர்கள் அலுவலகத்துக்கு வருவதில்லை என நிறுவனங்கள் புகார் கூறத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதை (Work From Home) சட்ட உரிமையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 கோடி ரூபாய் சம்பளம்.. இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
இதுவரை எந்தவொரு நாட்டிலுமே ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வது சட்ட உரிமையாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஊழியர்களுக்கு Work From Home சட்ட உரிமை வழங்குவதற்கு நெதர்லாந்தில் டி-66 கட்சியை சேர்ந்த ஸ்டீவன் வான் வெயென்பர்க், சென்ன மாதோக் ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மசோதா தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜூலை 3ஆம் தேதி நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவுக்கு ஊழியர்களும், ஊழியர் சங்கங்களு ஆதரவு தெரிவித்துள்ளதால் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்