ஆப்நகரம்

பிஎம் கிசான் 11ஆவது தவணை: பெயர் சேர்ப்பது எப்படி?

விவசாயிகள் தங்களது பெயரை பிஎம் கிசான் வெப்சைட்டில் பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 28 Feb 2022, 11:22 am
நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான விவசாயிகள் மத்திய மோடி அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றன. ஒரு தவணைக்கு ரூ.2000 என ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்த நிதியை மேலும் உயர்த்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil pm kisan


இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், 11ஆவது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு பிஎம் கிசான் நிதியுதவி வந்துசேரும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் நிறையப் பேர் இன்னும் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யாமல் உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்குக் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே பயன்பெறமுடியும் என்ற விதிமுறை ஆரம்பத்தில் இருந்தது. அதன்பிறகு இந்த விதிமுறை தளர்த்தப்பட்டது.

மிகச் சிறிய அளவு நிலம் வைத்திருந்தால்கூட இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறலாம். இத்திட்டத்தின் கீழ் இன்னமும் இணையாமல் இருக்கும் விவசாயிகளுக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த தவணை வருவதற்குள் தங்களது பெயரை இணைத்துக்கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

விவசாயிகளுக்கு பணம் கிடைக்காது.. உடனே இந்த வேலைய முடிங்க!
பிஎம் கிசான் www.pmkisan.gov.in. வெப்சைட்டில் சென்றால் ‘Farmers Corner’ என்ற ஒரு ஆப்சன் இருக்கும். அதில் கிளிக் செய்து ‘New farmer registration’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்போது பிஎம் கிசான் திட்டத்தில் இணைவதற்கான அந்த விண்ணப்பத்தில் உங்களுடைய பெயர், முகவரி, நில இருப்பு, மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைப் பதிவிட்டு 'submit' கொடுக்க வேண்டும்.

உங்களது பதிவு விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கு பிஎம் கிசான் வெப்சைட்டில் சென்று ‘Beneficiary Status’ என்பதில் பார்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்