ஆப்நகரம்

புதிய விமான சேவை – ஏர் இந்தியா அறிவிப்பு

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் சார்பில் வருகிற 30-ம் தேதி முதல் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு தினசரி புதிய விமான சேவையை தொடங்கப்போவதாக தென்மண்டல ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி தெரிவித்துள்ளார்.

TNN 23 Aug 2017, 1:24 pm

Samayam Tamil new flight service from chennai to trichy coimbatore and madurai
புதிய விமான சேவை – ஏர் இந்தியா அறிவிப்பு

மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது,
பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைக்கவும், அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதால் மக்கள் பயணுரும் வகையில் இந்த சேவையை ஆரம்பிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த விமான சேவையில் 70 பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிறிய ரக விமானம் இயக்கப்பட உள்ளது.

விமான பயண நிலவரம்

புறப்படும் நேரம் - திரும்பி வரும் நேரம்
சென்னை காலை 7.35 - திருச்சி காலை 10.20
சென்னை காலை 10.55 - விஜயவாடா பிற்பகல் 1.55
சென்னை பிற்பகல் 2.45 - மதுரை மாலை 6.00
சென்னை மாலை 6.50 - கோவை இரவு 10.50

இதில் ஒரு நாளையில் ஒரு நகரத்திற்கு ஒரு முறை மட்டுமே விமான சேவை அளிக்க இயலும் எனவும் மேலும் சிறிய ரக விமானங்கள் வந்த பின்னர் காலை, மாலை என தினமும் 2 முறை விமான சேவை வழங்க திட்டமிட்டுள்ளப்பட்டுள்ளதாகவும் அருள்மணி கூறினார்.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் மேலும் பயணிகளின் ஆதரவை பொறுத்தே விமான சேவை அதிகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என தென்மண்டல ஏர் இந்தியா விமான நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி தெரிவித்துள்ளார்.

New flight service from Chennai to Trichy, Coimbatore and Madurai

அடுத்த செய்தி

டிரெண்டிங்