ஆப்நகரம்

தமிழகத்தில் புழக்கத்துக்கு வந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள்!

இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் தமிழகத்தில் புழக்கத்துக்கு வந்துள்ளன.

Samayam Tamil 10 Jan 2018, 11:22 am
இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் தமிழகத்தில் புழக்கத்துக்கு வந்துள்ளன.
Samayam Tamil new one rupee note introduced in tamilnadu
தமிழகத்தில் புழக்கத்துக்கு வந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள்!


புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து, புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த போவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள, புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.

இதன் வடிவமைப்பு பழைய ஒரு ரூபாய் நோட்டை போல இருந்தாலும் அடர் இளஞ்சிவப்பு மற்றும் மற்றும் பச்சை வண்ணத்தில் காணப்படுகிறது. வழக்கமாக 10 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டுமே ரிசர்வ் வங்கி வெளியிடும்.

அதற்கு குறைவான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இந்திய அரசு வெளியிடும். அந்தவகையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள இந்த ஒரு ரூபாய் நோட்டில் மத்திய நிதித்துறை செயலரான சக்திகாந்த் தாசின் கையெழுத்து இடம்பெற்றிருக்கிறது.

நாட்டில் ஒரு ரூபாய் நோட்டை அச்சிடும் நடைமுறை கடந்த 1994ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புத்தாக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்