ஆப்நகரம்

பிஎஃப் சந்தாதார்களுக்கு சூப்பர் வசதி... புது அப்டேட்!

வேலையை விட்டு வெளியேறும்போது பிஎஃப் சந்தாதார்கள் அதை அப்டேட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Feb 2021, 8:09 pm
ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது அங்கு பிஎஃப் தொகை பிடிக்கப்பட்டு, அங்கிருந்து வேலையை விட்டு வெளியேறினால் அந்த பிஎஃப் பணம் என்ன ஆகும்? சில நேரங்களில் அந்த பிஎஃப் பணம் மாட்டிக்கொள்ளும். இதில் உள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய வசதியைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறும்போது அதுகுறித்த விவரங்களை பிஎஃப் கணக்கில் அப்டேட் செய்யலாம். இதுவரையில் வேலை வழங்கிய நிறுவனம் மட்டுமே இந்த விவரங்களை அப்டேட் செய்யும் வசதி இருந்தது.
Samayam Tamil pf


அப்டேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

ஈபிஎஃப்ஓ அமைப்பின் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையப் பக்கத்தில் செல்லவும்.

பிஎஃப் நம்பர், பாஸ்வர்டு மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவிட்டு லாகின் செய்யவும்.

(உங்களது பிஎஃப் எண் ஆக்டிவாக இருக்கிறதா என்று உறுதிசெய்துகொள்ளவும்.)

புதிதாக ஓப்பன் ஆகும் பக்கத்தில் ‘Manage’ என்ற டேபை கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் mark exit ஆப்சனை கிளிக் செய்து ‘Select Employment’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பழைய பிஎஃப் கணக்கு எண்ணைத் தேர்ந்தெடுத்தால் உங்களது வேலை மற்றும் பிஎஃப் விவரங்களைப் பார்க்கலாம்.

இதில் நீங்கள் வேலையை விட்டு விலகிய தேதி மற்றும் அதற்கான காரணத்தைப் பதிவிடவும்.

இதன் பின்னர் ’request OTP’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு submit கொடுக்கவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்