ஆப்நகரம்

உயர்வுடன் நிறைவடைந்த பங்கு வர்த்தகம்; 10,800 புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி!

இன்றைய பங்கு வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் நிறைவடைந்தது.

Samayam Tamil 21 Feb 2019, 5:08 pm
வாரத்தின் 4ஆம் நாளான இன்று, பங்குச்சந்தை லாபகரமாக வர்த்தகம் ஆனது. நிஃப்டி 10,800 புள்ளிகளில் நிறைவடைந்து, பார்மா, மெட்டல், பி.எஸ்.யூ பேங்கிங் ஆகியவற்றின் பங்குகள் நன்கு விற்பனையாகின.
Samayam Tamil Sensex


இன்றைய வர்த்தகத்தின் இறுதியில், சென்செக்ஸ் 142.09 புள்ளிகள் உயர்ந்து 35,898.35 புள்ளிகளில் முடிவுற்றது. இதேபோல் நிஃப்டி 54.40 புள்ளிகள் அதிகரித்து, 10,789 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

ஒட்டுமொத்தமாக 1,555 பங்குகள் லாபமும், 971 பங்குகள் நஷ்டமும், 146 பங்குகள் எந்தவித மாற்றமும் இன்றி காணப்பட்டன. இன்றைய பங்குச்சந்தையைப் பொறுத்தவரை, இண்டியாபுல்ஸ் ஹவுசிங், பஜாஜ் பின்சர்வ், டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ், வேதாந்தா உள்ளிட்டவை அதிக லாபம் ஈட்டின.

மேலும் பிபிசிஎல், பாரதி இன்ஃப்ராடெல், யெஸ் பெங்க், இன்போசிஸ், மாருதி சுசுகி ஆகியவற்றின் பங்குகள் நிஃப்டியில் நஷ்டத்தைச் சந்தித்தன.

ஐடி பிரிவைத் தவிர அனைத்து செக்டோரல் இண்டைசஸும் கிரீனில் முடிவு பெற்றன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஆகியவை முறையே 0.8% மற்றும் 1% லாபம் ஈட்டின.

அடுத்த செய்தி

டிரெண்டிங்