ஆப்நகரம்

3வது முறை ஜாமீன் மறுப்பு; நிரவ் மோடிக்கு மே 24 வரை சிறைக்காவல் நீட்டிப்பு!

வங்கிக் கடன் மோசடியில் நாட்டை விட்டு தப்பியோடிய நிரவ் மோடிக்கு, வரும் மே 24ஆம் தேதி வரை சிறைக்காவல் நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 26 Apr 2019, 5:49 pm
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று, வைர வியாபாரி நிரவ் மோடி(48) வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் கடந்த மார்ச் 19ஆம் தேதி கைது செய்த லண்டன் போலீசார், வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைத்தனர்.
Samayam Tamil Nirav Modi


இந்த சூழலில் நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து ஜாமீன் கேட்டு நிரவ் மோடி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதில், ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே நிரவ் மோடி இருமுறை தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்தக்கட்ட விசாரணை வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிரவ் மோடியின் சிறைக்காவலையும் மே 24 தேதிவரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முழுமையான விசாரணை மே 30ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்