ஆப்நகரம்

முத்ரா கடன் திட்டத்தில் சிறப்புச் சலுகை!

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 2 சதவீதம் வட்டிச் சலுகை வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

Samayam Tamil 14 May 2020, 7:26 pm
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் முத்ரா கடன்களை வழங்குகின்றன.
Samayam Tamil mudra loan


இந்த முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. சிஷு (Shishu) என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் (Kishor) என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் (Tarun) என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு நிறுவனங்கள் துறையினருக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் அரசு ஆதரவு வழங்கும் என்று நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.

நிர்மலா அறிவிப்பில் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன பயன்?

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முத்ரா - சிஷு கடன் பிரிவில் ரூ.1,500 கோடி கடனுதவி கிடைக்கும் எனவும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவோருக்கு 2 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கால அவகாசத்தை நீட்டித்துள்ளதால் கூடுதல் பயன் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

ஒரு நாடு - ஒரு ரேஷன் திட்டத்தால் என்ன பயன்? நிர்மலா விளக்கம்!

ஆனால் முத்ரா திட்டத்தின் கீழ் உள்ள கிஷோர், தருண் கடன் திட்டங்களுக்கு எந்த வட்டிச் சலுகையும் இன்று அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் இன்றைய அறிவிப்பு சிறு தொழில் முனைவோருக்கு சற்று நிவாரணத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்