ஆப்நகரம்

ரிசர்வ் வங்கி 2% வரை வட்டிவிகிதம் குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி 2% வரை வட்டிவிகிதத்தை குறைக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

TNN 25 Aug 2016, 2:10 am
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி 2% வரை வட்டிவிகிதத்தை குறைக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil nirmala sitharaman plumps for 200 bps rate cut by rbi
ரிசர்வ் வங்கி 2% வரை வட்டிவிகிதம் குறைக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்


இதுதொடர்பாக, தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களில் பெரும்பாலானவை நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளன. கூடுதலாக, வங்கிக் கடன் பெற்று, தங்களது வர்த்தகப் பணிகளை மேற்கொள்வதிலும் அவர்களுக்கு சிக்கல் உள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தை குறைத்தால் மட்டுமே, அவர்கள் வங்கிக் கடன் பெற்று, வர்த்தகத்தை மேம்படுத்த வாய்ப்புள்ளது. நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களே அதிக பங்களிப்பை வழங்குகின்றன.

எனவே, அவர்களின் நலனை கருத்தில்கொண்டு, வரும்காலத்தில் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதக் குறைப்பை அமல்படுத்த வேண்டும். என்னைக் கேட்டால், 2% சதவீதம் வரை வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தால், உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், ரெப்போரேட் விகிதம் 6.5% ஆக உள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் விடுவிக்கப்பட்டு, உர்ஜித் படேல் பதவியேற்க உள்ளார். அதன்பின், அக்டோபர் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதிக்கொள்கை வெளியிடப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்