ஆப்நகரம்

பொருளாதார வளர்ச்சி: அது ஈரோடு தூத்துக்குடி பக்கம் இருக்கு!

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காட்டுக்கும் கீழ் குறையும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 6 Dec 2020, 6:56 pm

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில்கள் முடங்கி பொருளாதாரம் சரிவை சந்தித்தது. இந்நிலையில், கொரோனாவுக்கு முன்பு இருந்த பொருளாதார வளர்ச்சியை 2022ஆம் ஆண்டு இறுதியில்தான் எட்ட முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil Economy


இதுகுறித்து மத்திய அரசின் நிதி ஆயோக் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, “2021-22ஆம் நிதியாண்டின் இறுதியில், கொரோனாவுக்கு முன்பு இருந்த பொருளாதார வளர்ச்சி நிலையை நாம் எட்டிவிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

உங்க அக்கவுண்டுக்கு ரூ.6000 வரும்: இதை உடனே செஞ்சிடுங்க!

இந்த ஆண்டு ஜிடிபி 8 விழுக்காட்டுக்கும் குறைவாக சரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்கும் என முன்பு ரிசர்வ் வங்கி மதிப்பிட்டிருந்தது. ஆனால், 7.5 விழுக்காட்டுக்கும் குறைவாக இருக்குமென தனது மதிப்பீட்டை மாற்றியுள்ளது.

எதிர்பார்த்ததை விட பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் பணவீக்கம் 6.8 விழுக்காடாக இருக்குமெனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 10.3 விழுக்காடாக குறையுமென கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அதேபோல, பொருளாதார வளர்ச்சி 8.9 விழுக்காடாக குறையுமென மூடீஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்