ஆப்நகரம்

வெளிநாட்டு விமானங்களுக்கு இந்தியாவில் இடமில்லை!

கொரோனா பீதியால் வெளிநாட்டு விமானங்களுக்கு இந்தியாவில் ஒரு வாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Mar 2020, 8:40 pm
கடந்த மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா சீரழிவு அந்நாட்டைத் தொடர்ந்து உலகின் மற்ற நாடுகளையும் பெரிய அளவில் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரையில் 158 நாடுகளில் 2,27,746 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,303 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 85,971 ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil வெளிநாட்டு விமானங்களுக்கு இந்தியாவில் இடமில்லை


இந்தியாவைப் பொறுத்தவரையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்ச் 22ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத் துறையினரைத் தின்னும் கொரோனா வைரஸ்!

விமானப் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரையில், சர்வதேச விமானப் பயணங்களை விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன. உள்நாட்டிலும் விமானப் பயணங்கள் குறைந்துள்ளன. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளாலும், வெளிநாடு வாழ் இந்தியர்களாலும் கொரோனா பரவ வாய்ப்பிருப்பதால் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கொரோனா பீதி: தமிழகத்தில் சிக்கியுள்ள 900 மலேசியர்கள்!

பட்டியலிடப்பட்ட சர்வதேச வர்த்தக விமானங்கள் எதுவும் மார்ச் 23ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு இந்தியாவுக்கு வரக்கூடாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மார்ச் 29ஆம் தேதி வரையில் இந்தத் தடை நீடிக்கும். இதனால் 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் (மருத்துவ சிகிச்சை பெறுவோர் தவிர்த்து) விமானப் பயணம் மேற்கொள்ளாமல் தங்களது இருப்பிடங்களிலேயே இருக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளும் வீடுகளிலேயே இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள், நோயாளிகள் உட்பட சில வகையினர் தவிர்த்து மற்றவர்களுக்கு விமானப் பயணங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இங்க யாரும் வராதீங்கப்பா... வங்கிகள் அட்வைஸ்!

இந்தியாவுக்கு வரும் வர்த்தக ரீதியிலான பயணிகள் விமானங்கள் அதிகபட்சம் 20 மணி நேரம் பயண நேரம் கொண்டவையாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்