ஆப்நகரம்

கேஸ் சிலிண்டர்: உங்களுக்கு பணம் வரலையா? அப்போ இதை செய்யுங்க!

கேஸ் சிலிண்டர் மானியம் நேரடியாக வாடிக்கையாளர் வங்கிக் கணக்குக்கே அனுப்பப்படும். இதற்கு ஆதார் - கேஸ் கணக்கு இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைக்காதவர்கள் இதை செய்தால் பணம் வரும்.

Samayam Tamil 24 Jan 2021, 12:23 pm
எல்பிஜி சமையல் சிலிண்டர்கள் மக்களுக்கு அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்க அரசு மானியம் வழங்கி வருகிறது. மானியத் தொகை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக அனுப்பப்படுகிறது.
Samayam Tamil LPG Cylinder


எனினும், இந்த மானியத்தை பெற வேண்டுமெனில் சிலிண்டர் இணைப்பு கணக்குடன் ஆதார் கார்டு இணைக்கப்பட வேண்டும். ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட சிலிண்டர் கணக்குகளுக்கு மட்டுமே அரசு மானியம் அனுப்பப்படும்.

இந்த ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால் ஆபத்து!
ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத சிலிண்டர் கணக்குகளுக்கு நேரடியாக மானியம் கிடைக்காது. எனினும், ஆதார் கார்டு இணைக்காதவர்களும் நேரடியாக மானியம் பெற ஒரு ஈசியான வழி இருக்கிறது.

உங்களுக்கு அருகில் இருக்கும் சிலிண்டர் ஏஜென்சி கிளைக்கு சென்று உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிக் கணக்கு எண், பயனாளியின் பெயர், வங்கியின் IFSC Code, 17 இலக்க சிலிண்டர் வாடிக்கையாளர் ID ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

கணக்கில் வராத ரூ.1,400 கோடி: வருமான வரித் துறை அதிரடி!
விநியோகஸ்தரிடம் இத்தகவல்களை சமர்ப்பித்துவிட்டால் உங்கள் வங்கிக் கணக்குக்கே நேரடியாக சிலிண்டர் மானியம் வந்துவிடும். இனி உங்களுக்கு எவ்வளவு மானியம் தொகை வருகிறது என்பதை ஈசியாக தெரிந்துகொள்ளலாம். ஏஜென்சியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் மானியம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்