ஆப்நகரம்

உலக பணக்காரர்களுடன் முட்டி மோதும் அம்பானி!

பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Samayam Tamil 14 Jul 2020, 8:09 pm
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரான முகேஷ் அம்பானி, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவர் கால் வைக்காத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் தொழில்புரிந்து வருவதோடு, அந்தந்தத் துறைகளில் கோலோச்சியும் வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் இந்தியாவே முடங்கிக் கிடக்கும் நிலையில் அம்பானி ஒருபுறம் கோடிக் கணக்கில் முதலீடுகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறார். பங்குச் சந்தையிலும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் ஏறிக்கொண்டே செல்கிறது.
Samayam Tamil mukesh ambani


சமீபத்தில் உலகின் மிகப் பெரிய முதலீட்டாளரான வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி சர்வதேச பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி ஏழாவது இடத்துக்கு முன்னேறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் அம்பானி பணக்காரர் பட்டியலில் முன்னேறியிருக்கிறார். புளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலராக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.5.44 லட்சம் கோடியாகும். இதற்கு முன்னர் ஆறாவது இடத்தில் இருந்த லாரி பேஜ் தற்போது ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை!

திங்கள் கிழமை மட்டும் 2.17 பில்லியன் டாலர் உயர்வைச் சந்தித்த அம்பானி, சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் இந்த உடனடி ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறார். அம்பானிக்கு முன்னிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவ் பால்மர் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 74.6 பில்லியன் டாலராக இருக்கிறது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 184 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். பில் கேட்ஸ் இரண்டாம் இடத்திலும், பெர்னார்டு அர்னால்டு மூன்றாம் இடத்திலும், மார்க் ஜூகர்பெர்க் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்