ஆப்நகரம்

அரசு பத்திரங்களில் நீங்களும் முதலீடு செய்யலாம்.. மொபைல் இருந்தா போதும்!

அரசு பத்திரங்களில் ஈசியாக முதலீடு செய்து பயன்பெறுவது எப்படி?

Samayam Tamil 16 Feb 2022, 1:16 pm
அரசு பத்திரங்கள் என்றால் பணம் படைத்த பெரிய முதலீட்டாளர்கள்தான் முதலீடு செய்வார்கள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. ஆனால், சாதாரண சிறு முதலீட்டாளர்களும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்து பயன்பெறலாம்.
Samayam Tamil Bonds


இதற்கு உங்கள் மொபைலில் goBID ஆப் மட்டும் இருந்தால் போதும். இந்த ஆப் தேசிய பங்குச் சந்தையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, முதலில் உங்கள் மொபைலில் NSE goBID ஆப் டவுன்லோடு செய்துகொள்ளவும்.

இந்திய அரசின் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் ஏலம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க goBID தளத்தில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும். சிறு முதலீட்டாளர்கள் goBID மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலமாகவே ஏலத்தில் பங்கேற்கலாம்.

வீடு, சொத்து வாங்கி குவிக்க சூப்பர் வாய்ப்பு.. அதுவும் மிக குறைந்த விலையில்!
ஆப்பில் விற்பனைக்கு உள்ள T-Bill/Bond பத்திரங்களில் விலை கேட்கலாம். பின்னர் டீமாண்ட் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு வாயிலாக ஆன்லைனிலேயே பணப் பரிவர்த்தனையை முடித்துவிடலாம். இதையடுத்து உங்கள் டீமாட் கணக்கிற்கு பத்திரங்கள் வந்துசேரும்.

இவ்வகையில், சிறு முதலீட்டாளர்களும் எளிதாக மொபைல் ஆப் மூலம் இந்திய அரசு பத்திரங்களில் முதலீடு செய்து பயன்பெறலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்