ஆப்நகரம்

இனி வாட்சப்பில் கடன் வாங்கலாம்.. அதுவும் 30 நொடிகளில்!

வாட்சப்பிலேயே 30 நொடிகளில் கடன் வாங்கும் திட்டத்தை CASHe நிறுவனம் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 16 Jun 2022, 6:39 pm
வெறும் 30 நொடிகளில் கடன் வழங்குவதற்கான திட்டத்தை வாட்சப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்சப் வணிக பயனாளிகள் (Whatsapp Business users) மட்டுமே இந்த கடனை பெற முடியும். CASHe என்ற முன்னணி கடன் நிறுவனம் இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.
Samayam Tamil whatsapp loan


இதன் கீழ் வெறும் 30 நொடிகளில் கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். மேலும், கடன் பெறுவதற்கு எந்தவொரு ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவையில்லை. உங்களிடம் வாட்சப் மட்டும் இருந்தாலே போதுமானது.

கடன் பெறுவது எப்படி?

உங்கள் மொபைலில் 8097553191 எண்ணை பதிவு செய்துகொள்ளவும். இந்த எண்ணுக்கு வாட்சப்பில் 'Hi' என மெசேஜ் அனுப்பவும். இதைத்தொடர்ந்து கடன் தொடர்பான தகவல்கள் உங்களுக்கு வரும். இந்த சேவை எல்லா நாட்களும் 24 மணி நேரமும் உண்டு.

வீட்டு கடன் மினிமம் வட்டி உயர்வு.. எகிறும் EMI செலவு!
எவ்வளவு கடன் கிடைக்கும்?

உங்களது விவரங்கள் அனைத்தும் ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக முழுவதுமாக சரிபார்க்கப்படும். பின்னர் உங்களுக்கு எவ்வளவு தொகை வழங்குவது என்பதும் முடிவு செய்யப்படும். இதன் அடிப்படையில் நீங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என்ற தகவல் உங்களிடமே சொல்லப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்