ஆப்நகரம்

வாராக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் காலதாமதம்: ரகுராம் ராஜன்

வாராக்கடன்களை சீர்செய்வது தொடர்பாக, ரிசர்வ் வங்கி உரிய காலத்தில் செயல்பட தவறிவிட்டதாக, ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

TNN 27 Jul 2016, 1:37 am
வாராக்கடன்களை சீர்செய்வது தொடர்பாக, ரிசர்வ் வங்கி உரிய காலத்தில் செயல்பட தவறிவிட்டதாக, ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil npa clean up should have started much earlier raghuram rajan
வாராக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் காலதாமதம்: ரகுராம் ராஜன்


பொதுத்துறை வங்கிகளை அச்சுறுத்திவரும் வாராக்கடன் பிரச்னை தொடர்பாக, உரிய கணக்கெடுப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கடந்த சில ஆண்டுகளாக தீவிரப்படுத்தியுள்ளார். இதன்மூலமாக, கடன்தொகையை திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள், நிறுவனங்கள் என பலதரப்பினரும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதோடு, சிலர் கடன்தொகையை திருப்பிச் செலுத்தவும் முன்வந்துள்ளனர்.

தற்சமயம், ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. மீண்டும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் தொடர அவர் விரும்பவில்லை. இந்நிலையில், வாராக்கடன் பிரச்னை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், முன்கூட்டியே விரைந்து செயல்பட்டு, உரிய நேரத்தில் வாராக்கடனை சரிசெய்ய முயற்சித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி சார்பாக, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால், வாராக்கடன் அளவு அதிகரித்து, பொதுத்துறை வங்கிகளின் வர்த்தகம் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய காலத்தில் இருந்த இத்தகைய மந்தகதியிலான செயல்பாடுகளை, தனது பதவிக்காலத்தில் முடிந்தவரை வேகப்படுத்தி, தீர்வு காண முயற்சித்ததாகவும், ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டி உள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்