ஆப்நகரம்

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்.. இனி இந்தக் கட்டணம் கிடையாது!

2000 ரூபாய் வரையிலான ரூபே கிரெடிட் கார்டு யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் இல்லை என அறிவிப்பு.

Samayam Tamil 6 Oct 2022, 2:02 pm
ரூபே (RuPay) கிரெடிட் கார்டுகள் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளன. பல்வேறு வங்கிகள் ரூபே கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
Samayam Tamil Rupay


ரூபே கிரெடிட் கார்டுகளை யூபிஐ (UPI) உடன் இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த வசதியால் ரூபே கிரெடிட் கார்டு பயனர்கள் எளிதாக யூபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

இந்நிலையில், ரூபே கிரெடிட் கார்டுகள் வாயிலாக 2000 ரூபாய் வரையிலான யூபிஐ பரிவர்த்தனைகளை எந்தக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக மேற்கொள்ளலாம் என தேசிய பரிவர்த்தனைக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.

Aadhaar Photo Change: ஆதார் கார்டில் போட்டோ மாத்தணுமா? இதை பண்ணுங்க போதும்!
இதுகுறித்து தேசிய பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ஆப்களில் கிரெடிட் கார்டை இணைக்கும்போது, UPI PIN செட் செய்யும்போது அனைத்து வகை பரிவர்த்தனைகளுக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம் என்பதற்கான வாடிக்கையாளர் ஒப்புதல் பெறப்படும்.

2000 ரூபாய் அல்லது அதற்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் (Merchant Discount Rate) கட்டணம் வசூலிக்கப்படாது” என்று தெரிவிக்கப்படுள்ளது.

எம்டிஆர் (Merchant Discount Rate) என்பது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட வியாபாரியால் வங்கிக்கு செலுத்தப்படும் கட்டணம் ஆகும். இந்தக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் இரு தரப்பினரும் பயனடைவார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்