ஆப்நகரம்

பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பு... நவம்பருக்குள் இதை முடிக்கணும்!

வெளிநாட்டில் வாழும் பென்சனர்கள் நவம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Sep 2021, 7:24 pm
மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர், வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை மத்திய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ளது. வருடாந்திர ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது தொடர்பான இந்த அறிவிப்பில், பென்சன் மற்றும் குடும்ப பென்சன் பெறுபவர்கள் தொடர்ந்து பென்சன் உதவிகளைப் பெறவேண்டுமானால் நவம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil pension


வெளிநாட்டில் வசிக்கும் பென்சனர்கள் மற்றும் குடும்ப பென்சன் பெறுபவர்கள் மத்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-இன் இரண்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள எந்த வங்கியின் மூலமும் பென்சன் பெற்றால் அவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழில் வங்கி அதிகாரிகளால் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.

பென்சன் பெறுபவர் மற்றும் குடும்ப பென்சன் பெறுபவர் வெளிநாட்டில் இருந்தால் அவருடைய ஏஜெண்ட் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று ஆயுள் சான்றிதழை இங்கே சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டில் இருப்பவர்கள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகார அமைப்பு மூலம் ஆன்லைனில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை https://jeevanpramaan.gov.in/ என்ற வெப்சைட்டில் சமர்ப்பிக்கலாம்.

இனி பென்சன் வராதா? வெளியான பரபரப்புத் தகவல்!
இந்தியாவுக்கு வர முடியாத என்ஆர்ஐ ஓய்வூதியம் பெறுபவர்கள்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், இந்திய தூதரகம்/உயர் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்படும் சான்றிதழின் அடிப்படையில் பென்சன் பெறலாம். பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்ட புகைப்படம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சான்றிதழ் வழங்கப்படலாம். பென்சன் பெறுபவர் இந்திய தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்ல முடியாவிட்டால், அவர் தேவையான ஆவணங்களை தூதரகம்/துணைத் தூதரகத்துக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்கலாம்.

பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்! எஸ்பிஐ அசத்தல் அறிவிப்பு!
இந்தியத் தூதரகம்/உயர் ஆணையம்/இந்திய துணைத் தூதரகம் ஆகியவை பென்சன் தாரர்களுக்கு ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க உதவலாம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்