ஆப்நகரம்

Chitra Ramkrishna: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சிக்கல்.. பங்குச் சந்தை ஊழல் வழக்கில் சிபிஐக்கு கிரீன் சிக்னல்!

பங்குச் சந்தை ஊழல் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தேசிய பங்குச் சந்தை போர்டு ஒப்புதல்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 14 Feb 2023, 12:09 pm
பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட்டது, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஆதரவாக வசதிகள் செய்துகொடுத்தது என தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் மற்றொரு அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
Samayam Tamil chitra ramkrishna
chitra ramkrishna


இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், 2018ஆம் ஆண்டு மே மாதம் முதன்முதலாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 4 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் சித்ரா ராமகிருஷ்ணாவையும், ஆனந்த் சுப்ரமணியனையும் சிபிஐ கைது செய்தது.

இவ்வழக்கு குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, பங்குச் சந்தையின் கம்பியூட்டர் சர்வர்களில் நடந்த முறைகேடுகல் குறித்து சிபிஐ ஆய்வு செய்து வருகிறது. இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சித்ராவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பணமோசடி, தேசிய பங்குச் சந்தை ஊழியர்களின் போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்டது ஆகிய வழக்குகளில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்ட பிறகு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய பங்குச் சந்தையின் (National Stock Exchange) நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்குவதற்கு சிபிஐ காத்திருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி தேசிய பங்குச் சந்தையின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சித்ரா ராமகிருஷ்ணா மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஒப்புதல் வழங்கியுள்ளது நிர்வாகக் குழு. இதில், சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள Co-location ஊழல் வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்