ஆப்நகரம்

பென்சன் திட்டங்களில் குவியும் இந்தியர்கள்!

தேசிய பென்சன் திட்டம் மற்றும் அடல் பென்சன் யோஜனா திட்டங்களில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

Samayam Tamil 18 Mar 2021, 8:02 pm
தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனடைவதற்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5,000 ரூபாய் பென்சன் பெறமுடியும். இத்துடன், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. அடல் பென்சன் யோஜனா திட்டம் வாழ்நாள் முழுவதும் பென்சன் தரும் என்பது முக்கிய அம்சமாகும். பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும்.
Samayam Tamil pension


அதேபோல, தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் இப்போது 8 முதல் 10 சதவீதம் வரையில் வட்டி லாபம் கிடைக்கிறது.

உடனே இதைச் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்! SBI அறிவிப்பு!!
மேற்கூறிய இரண்டு திட்டங்களுக்கும் வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகையும் கிடைக்கிறது. இவ்விரு திட்டங்களிலும் அதிகப் பேர் இணைந்து வருகின்றனர். அரசு தரப்பு விவரங்களின் படி, பிப்ரவரி மாத இறுதியில் இவ்விரு திட்டங்களிலும் கணக்கு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 4.15 கோடியாக உயர்ந்துள்ளது. இது 22 சதவீத வளர்ச்சியாகும். 2020 பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 3.4 கோடியாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்