ஆப்நகரம்

ஐடி நிறுவனங்களில் பெண்களின் ஆதிக்கம்!

இந்திய ஐடி தொழில் துறையில் பெண்களின் பங்கு 21 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 12 Dec 2019, 12:42 pm
ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் இப்போது அனைத்துத் துறைகளிலும் ஜொலிக்கத் தொடங்கியுள்ளனர். பெண்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கும் ஆண்களுக்கு ஈடாகப் பெண்களும் முன்னேறி வருகின்றனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் குறித்து இண்டெல் நிறுவனமும் ஜின்னோவ் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் பெண்களின் எண்ணிக்கை ஐடி துறையில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
Samayam Tamil ஐடி நிறுவனங்களில் பெண்களின் ஆதிக்கம்


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்நுட்ப நிறுவனங்களில் 21 சதவீதமாக இருந்த பெண்களின் பங்களிப்பு தற்போது 30 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, ஜூனயர் லெவல் பிரிவில் பெண்களின் பங்களிப்பு 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், நடுத்தர பிரிவு பணிகளில் 20 சதவீதமாகவும், சீனியர் லெவல் பிரிவில் 11 சதவீதமாகவும் பெண்களின் பங்களிப்பு உள்ளது.

தங்கம் விலை: அடப்பாவிகளா... மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா? மீண்டும் விலை உயர்வு!

பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து ஜின்னோவ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான பாரி நடராஜன் பேசுகையில், “பெண்களின் பங்களிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை மேலும் ஊக்குவிப்பதற்கு அலுவலகங்களின் சூழலை அவர்களுக்கு உகந்ததாக மாற்ற வேண்டும். பெண்களுக்கான கல்வி வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும். பெண் தொழில்முனைவோரை அதிகமாக ஊக்குவிக்க வேண்டும்” என்று ஆலோசனை தெரிவித்தார்.

மொபைல் நெட்வொர்க் சரியில்லை: 26,400 புகார்கள் பதிவு!

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் புள்ளி விவரங்களின்படி, ஒவ்வொரு ஐந்து ஆண்களுக்கும் இரண்டு பெண்கள் மட்டுமே தொழில்முறைப் படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். குடும்பப் பொறுப்புகள் பெண்களை தொழில்முறைப் படிப்புகளிலிருந்தும் தொழில் துறையிலிருந்தும் விலக்குவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய காலத்தில் அலுவலகத்தில் பெண்களுக்கான சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வேலைக்கு வருவதற்கு நிறுவனங்கள் ஊக்குவிப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்