ஆப்நகரம்

வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!!

OPEC மிகப்பெரிய உற்பத்திக் குறைப்பைச் செய்வதால் இந்தியாவில் எண்ணெய் விலைகள் மேலும் உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Samayam Tamil 4 Oct 2022, 4:14 pm
தொற்றுநோய்க்குப் பிறகு எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய சரிவில் நகர்வதாக பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) கூறுகிறது. அதனால் இந்தியா போன்ற அதிக அளவில் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் கச்சா எண்ணெய் விலைகள் உயரக்கூடும்.
Samayam Tamil petrol price hike


இன்று வியன்னாவில் நடைபெறும் கூட்டத்தில் ஒபெக் எண்ணெய் கார்டெல் மற்றும் ரஷ்யா உட்பட அதன் கூட்டாளிகள் உற்பத்தியை ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய்கள் (பிபிடி) குறைக்க பரிசீலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் விலைகள் திங்களன்று 4 டாலருக்கு மேல் உயர்ந்ததை அடுத்து ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து இதுபற்றிக் கூறிவருகிறது.

சீனாவின் கடுமையான லாக்டவுன்கள் மற்றும் அமெரிக்க டாலரின் உயர்வால் உலக நிதிச் சந்தைகளில் உருவாக்கப்படும் சரிவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஜூன் மாதம் தொடங்கி, தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு எண்ணெய் விலை சரிந்துள்ளது.

எண்ணெய் விலைகளை ஆதரிப்பதற்காக, OPEC மற்றும் OPEC+ என அழைக்கப்படும் அதன் நட்பு நாடுகள் - இந்த உற்பத்தி குறைப்பை பரிசீலித்து வருகின்றன. இந்த முன்மொழியப்பட்ட உற்பத்திக் குறைப்பு 1 மில்லியனுக்கும் அதிகமான பிபிடியில் தனிப்பட்ட உறுப்பினர்களின் கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் ராய்ட்டர்ஸிடம் கிடைத்த ஒரு ஆதாரம் தெரிவித்துள்ளது.

OPEC என்பது 14 பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது உலகின் கச்சா எண்ணெயில் 40 சதவீதத்தை ஒன்றாக உற்பத்தி செய்கிறது. இந்தியா, தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை OPEC நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்