ஆப்நகரம்

ஒரே நாணயத்துக்கு ரூ.50 லட்சம் பரிசு.. இதுல அப்படி என்ன இருக்கு!

1930ஆம் ஆண்டை சேர்ந்த மிக பழைய அரிய நாணயம் ஒன்று சுமார் 60000 டாலருக்கு விற்பனையாகியுள்ளது.

Samayam Tamil 3 Oct 2022, 3:59 pm
1930ஆம் ஆண்டை சேர்ந்த ஆஸ்திரேலிய நாணயம் ஏலத்தில் சுமார் 60000 டாலர் விலைக்கு விற்பனையாகியுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இந்த நாணயத் தொகுப்பை வெளியிடுவதற்கே 1930 கால ஆஸ்திரேலிய அரசுக்கு திட்டமில்லையாம்.
Samayam Tamil coins


நேற்று இரவு லாய்ட்ஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இந்த பழைய அரிய நாணயம் சரியாக 59,415 டாலருக்கு விற்பனையாகியுள்ளது. இந்த நாணயத்தை மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

60,000 டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 49 லட்சம் ரூபாய். இதுமட்டுமல்லாமல், இந்த நாணயம் இப்போதும் நல்ல கண்டீஷனில் இருப்பதால லாய்ட்ஸ் நிறுவனம் கூறுகிறது. மேலும், இந்த நாணயத்துக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறும் உள்ளது.

எகிறும் வட்டி.. இதுக்கு மேல தாங்க முடியாது.. ரியல் எஸ்டேட் துறைக்கு ஆபத்து!
1929ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகள் சரிந்து நெருக்கடி ஏற்பட்ட பிறகு இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், முதலில் இந்த நாணயங்களை வெளியிடுவதற்கே அரசுக்கு திட்டமில்லை.

முதலில் இந்த நாணயங்களை அச்சிட்டு வெளியிட அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. பின்னர் நெருக்கடி காலத்தில் 1930ஆம் ஆண்டில் ஆர்டர்களை ரத்துசெய்துவிட்டது. ஆனால் அதற்குள் சுமார் 3000 நாணயங்கள் அச்சிடப்பட்டுவிட்டன. இதில் 1500 நாணயங்கள் மட்டும் வெளியிடப்பட்டன.

எனவே, இந்த நாணயங்கள் மிக மிக அரிதானவை. இதற்கு முன் 2019ஆம் ஆண்டில் இதே நாணயம் 1.15 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஒரு நாணயம் 60,000 டாலருக்கு விற்பனையாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்