ஆப்நகரம்

Ease Of Doing Business: தொழில் செய்ய சிறந்த மாநிலங்கள்.. தமிழகம் முன்னிலை!

இந்திய அளவில் எளிதாகத் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மாநிலங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Jul 2022, 12:32 pm
இந்தியாவுக்கு உள்ளேயே மாநில அளவில் எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் எவ்வாறு உள்ளன என்பதைக் கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஆந்திரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும் ஜூன் 30ஆம் தேதி இந்தப் பட்டியலை வெளியிட்டனர்.
Samayam Tamil business


இப்பட்டியலில், குஜராத், தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட முன்னணி மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி ஆந்திரா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளன. இப்பட்டியலில் ஆந்திரா பலமுறை முதலிடத்தில் இருந்திருக்கிறது. ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் தமிழகம், ஹரியானா, குஜராத், கர்நாடகா, பஞ்சாப், தெலங்கனா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இப்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த நான்கு பிரிவுகள் - achievers, achievers, aspiring achievers மற்றும் emerging business eco-system. இதில் achievers பிரிவில் இமாசலப் பிரதேசம், ஒடிசா,உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதுபோல நான்கு பிரிவுகளும் மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படுகின்றன. சர்வதேச அளவில் இந்தியாவில் போட்டிமிக்க நாடாக உருவாக்கும் நோக்கத்தில்தான் உள்நாட்டிலேயே மாநில அளவில் இப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் எளிதாகக் கிடைப்பது, தங்கு தடை இல்லாத முதலீடு, தொழில் நடத்துவதில் பிரச்சினைகள் இல்லாமை போன்ற பல்வேறு காரணிகளால் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்