ஆப்நகரம்

ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக செங்கல் வந்ததாக கூறி பிளிப்கார்டை ஏமாற்றிய கிள்ளாடி

இணையதள வர்த்தகத்தில் முன்னனியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று பிளிப்கார்ட்டும் ஒன்று. இதில் செல்போன், கேமரா போன்ற விலை உயர்ந்த பொருட்கள் அவர்களின் இணையதள பக்கத்தின் மூலம் பதிவு செய்து வாங்கிய சிலர் அவர்கள் வாங்க விரும்பிய பொருளுக்கு பதிலாக, செங்கல், களிமண் ஆகியவற்றை விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது.

Samayam Tamil 8 Jun 2018, 1:23 pm
பெங்களூரு : இணையதள வர்த்தகத்தில் முன்னனியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று பிளிப்கார்ட்டும் ஒன்று. இதில் செல்போன், கேமரா போன்ற விலை உயர்ந்த பொருட்கள் அவர்களின் இணையதள பக்கத்தின் மூலம் பதிவு செய்து வாங்கிய சிலர் அவர்கள் வாங்க விரும்பிய பொருளுக்கு பதிலாக, செங்கல், களிமண் ஆகியவற்றை விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது.
Samayam Tamil flipkart


பிளிப்கார்டு நிறுவனமும் வாடிக்கையாளர்கள் முக்கியம் என கருதி ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பி வழங்கியது.

செங்கல் என கூறி ஏமாற்றிய நபர்:
இதுகுறித்து அதிக புகார்கள் வாடிக்கையாளர் மையத்திற்கு வருவதால் பிளிப்கார்ட் நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. இந்நிலையில் இதுகுறித்த புகார்களை விசாரணை செய்ய சைபர்கிரைம் போலீஸாரை நாடியது.

இதில் ஜனவரி 1, 2016 முதல் - நவம்பர் 3, 2017 வரை இதுபோன்ற புகார்களை விசாரித்தத்தில், ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக, செங்கல், களிமண் வந்ததாக புகார் தெரிவித்த ஒரே ஆளாகத்தான் இருப்பார் என தெரியவந்துள்ளது.

வெவ்வேறு பெயர்களில் பொருட்களை ஆர்டர் செய்திருந்தாலும், ஒரே வங்கி கணக்கை பயன்படுத்தியுள்ளார். பிளிப்கார்டு நிறுவனமும் ஒரே வங்கி கணக்கில் பணத்தை திருப்பி வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம் என பிளிப்கார்டு நிறுவன செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்