ஆப்நகரம்

சிகரெட் உட்பட 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி!

50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீதம் ஜிஎஸ்டி நிர்ணயிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

TNN 10 Nov 2017, 2:39 pm
கவுகாத்தி: 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீதம் ஜிஎஸ்டி நிர்ணயிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil only 50 goods and services comes under 28 gst
சிகரெட் உட்பட 50 பொருட்களுக்கு மட்டும் 28% ஜிஎஸ்டி!


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 23வது முறையாக அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இதில் தினசரி பயன்பாட்டு தேவைப்படும் 177 பொருட்களின் வரி குறைக்கப்படுகிறது.

இதில் ஜவளிகள் மீதான வரி 18 சதவீத்தில் இருந்த 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. டிராக்டர் உதிரி பாகங்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைகிறது, ரேஷன் கடைகளுக்குச் செலுத்தப்படும் கமிஷன் மீதான வரி முழுதும் ரத்து.

ஷேவிங் க்ரீம், ஷாம்பூ போன்ற அழகு சாதனங்களின் ஜிஎஸ்டியும் 18 சதவீதமாக சரிகிறது.

சிகரெட் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்ட 50 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி 28% சதவீதமாக இருக்கும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைப்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு விகிதங்களில் வரிகள் விதிக்கப்படுகின்றன. இதில், 28 சதவீதம் வரி விதிக்கப்படும் பொருட்களின் வரி விகிதம் 80 சதவீதம் குறைக்கப்பட்டு 18 சதவீதம் ஜிஎஸ்டிக்குள் பெரும்பாலான பொருட்கள் வந்துவிடும் என்றும் கருதப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாலையில் வெளியிடுவார் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்