ஆப்நகரம்

11.44 லட்சத்திற்கும் மேற்பட்ட பான் கார்டுகள் ரத்து

ஜூலை 27ம் தேதி கணக்கின் படி கிட்டத்தட்ட 11.44 லட்சம் பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை நிதியமைச்சர் சந்தோஷ்முமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.

TNN 2 Aug 2017, 11:38 am
புதுடெல்லி : ஜூலை 27ம் தேதி கணக்கின் படி கிட்டத்தட்ட 11.44 லட்சம் பான் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை நிதியமைச்சர் சந்தோஷ்முமார் கங்குவார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil over 11 44 lakh pans deactivated government
11.44 லட்சத்திற்கும் மேற்பட்ட பான் கார்டுகள் ரத்து


ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்கள் வைத்துள்ளதை கண்டறிந்து அதை ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 27ம் தேதி வரை கணக்கிடப்பட்டுள்ளதன் படி கிட்டத்தட்ட 11 லட்சத்து 44 ஆயிரத்து 211 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் எண்கள் வைத்திருந்ததை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-2007ம் ஆண்டு காலத்தில் போலி பெயர், முகவரி கொடுத்து 1566 பான்கார்டுகள் கண்டறியப்பட்டது. ” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்