ஆப்நகரம்

2000 வங்கிக் கிளைகள் மூடல்... காரணம் என்ன?

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

Samayam Tamil 10 May 2021, 2:15 pm
இந்திய வங்கித் துறையில் நிலவிவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ரிசர்வ் வங்கி தரப்பிலும் அரசு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகளும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதி நெருக்கடியில் சிக்கி தொடர்ந்து இயங்க முடியாமல் திவால் நிலைக்குச் செல்லும் வங்கிகளைப் பெரிய வங்கிகளுடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும் அந்த வகையில், கடந்த நிதியாண்டில் பல்வேறு இணைவு நடவடிக்கைகள் வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 2020-21 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 2,118 வங்கிக் கிளைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
Samayam Tamil bank


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல்களின்படி, 2020-21 நிதியாண்டில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் 1,283 கிளைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அதேபோல, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 332 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் 169 கிளைகளும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் 124 கிளைகளும், கனரா வங்கியின் 107 கிளைகளும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53 கிளைகளும், செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் 43 கிளைகளும், இந்தியன் வங்கியின் 5 கிளைகளும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் 43 5 கிளைகளும், பஞ்சாப் & சிந்த் வங்கியின் ஒரு கிளையும் மூடப்பட்டுள்ளது.

இனி இந்த வங்கியில் பணம் எடுக்க முடியாது!
அதேநேரம், பேங்க் ஆஃப் இந்தியா, யூசிஓ பேங்க் போன்ற வங்கிகளின் கிளைகள் எதுவும் சென்ற ஆண்டில் மூடப்படவில்லை. வங்கிகள் இணைப்பு காரணமாகவே மேற்கூறிய 10 பொதுத் துறை வங்கிகளின் கிளைகள் இணைக்கப்பட்டுள்ளன அல்லது மூடப்பட்டுள்ளன. இதற்கான வேறு காரணம் எதையும் ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை. இந்த இணைவு நடவடிக்கைக்குப் பிறகு பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆகக் குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ், சிண்டிகேட் பேங்க் கனரா பேங்க், அலகாபாத் பேங்க், ஆந்திரா பேங்க், கார்பரேசன் பேங்க் உள்ளிட்ட 10 வங்கிகள் நான்கு வங்கிகளாக இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்