ஆப்நகரம்

70 லட்சம் பேருக்கு வேலை காலி... கொரோனா செய்த வேலை!

கொரோனா பாதிப்பால் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

Samayam Tamil 4 May 2021, 7:36 pm
வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இந்தியாவில் நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் சென்ற ஆண்டில் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்த கொரோனா வைரஸ் பாதிப்பால் வேலையின்மைப் பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. வருவாய் இழப்பால் பெரும்பாலானோர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். புதிய வேலைவாய்ப்புகளும் கேள்விக்குறியானது.
Samayam Tamil unemployment


இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிலைமை சரியாகிவிடும் என்று நினைத்த சூழலில் தற்போது கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஊரடங்கு அறிவிப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய நான்கு மாதங்களில் மிகப் பெரிய பின்னடைவாகும். முன்னதாக மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.5 சதவீதமாக மட்டுமே இருந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... பணம் வரும் தேதி இதோ...
ஏப்ரல் மாதத்தில் மட்டும் கொரோனா பிரச்சினையால் சுமார் 70 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நகர்ப்புறங்களில் வேலையின்மை பிரச்சினை அதிகரித்துள்ளது. வேலையின்மை விகிதம் நகர்ப்புறங்களில் 9.78 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம், கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.13 சதவீதமாக இருக்கிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படாவிட்டால் மே மாதத்தில் இதை விட அதிகமாக வேலையின்மை விகிதம் உயரும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்