ஆப்நகரம்

இறக்குமதி: இந்தியாவுக்கு கதவைத் திறந்த பாகிஸ்தான்!

பருத்தி மற்றும் சர்க்கரையை இந்தியாவிலிருந்து மீண்டும் இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Samayam Tamil 31 Mar 2021, 4:13 pm
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை என்பது நீண்ட காலமாகவே தீராத பிரச்சினையாக இருக்கிறது. ஜம்மு - காஷ்மீரில் நடைபெறும் இப்பிரச்சினையால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வர்த்தக உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து பருத்தி, வெள்ளை சர்க்கரை போன்ற பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil pakistan


2019 ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியவுடன் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இறக்குமதியைத் தொடங்கியுள்ள பாகிஸ்தான் அடுத்து வரும் நாட்களில் மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதிக்கு வழிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், சர்வதேச அளவில் மிகப் பெரிய பருத்தி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. அதேபோல, வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

Aadhaar PAN Link: ஆதார் - பான் இணைப்பு... கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?
அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சர்க்கரை மற்றும் பருத்தி ஏற்றுமதியை அதிகப்படுத்தினால் இந்தியாவுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. அதேபோல, பாகிஸ்தான் நாட்டில் சர்க்கரை விலை அதிகரித்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்த இந்த இறக்குமதி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜெர்மனியும் ஃபிரான்ஸும் பல முறை மோதிக்கொண்டாலும் வர்த்தக ரீதியாகத் தற்போது நல்ல உறவில் இருப்பதாகவும், இந்தியாவும் பாகிஸ்தான் அதுபோலத் திகழும் எனவும் கூறியுள்ளார். காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அமர்ந்து பேசி தீர்க்கமான முடிவை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்