ஆப்நகரம்

PAN card: இன்னும் ஆதாரை இணைக்கலயா? 1,000 ரூபாய் அபராதம் கட்டணும்!

ஆன்லைன் மூலமாக நீங்களே ஈசியா இணைக்கலாம்!

Samayam Tamil 12 Apr 2021, 3:29 pm
பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கு இன்னும் முன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை இணைக்காதவர்கள் விரைவில் இணைப்பது நல்லது. பான் - ஆதார் இணைப்பது எப்படி என்று தெரியாதவர்கள் இதைப் பாருங்கள்!
Samayam Tamil pan card aadhaar card linking june 30 is the last date penalty of rs 1000
PAN card: இன்னும் ஆதாரை இணைக்கலயா? 1,000 ரூபாய் அபராதம் கட்டணும்!


ஆதார் - பான் இணைப்பு!

தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டு அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டுகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆதார் - பான் இணைப்புக்கான நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இதற்கான கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டின் ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிப்பு!

மார்ச் 31ஆம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடையும் சூழலில் பலர் ஆதாரை பான் கார்டுடன் இணைக்காமல் இருந்ததால் கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கடைசி நாளில் நிறையப் பேர் ஆன்லைன் மூலமாக ஆதார் - பான் இணைப்புக்கு முயற்சித்ததால் செர்வர் பிரச்சினை ஏற்பட்டது. பலரால் அன்று இணைக்க முடியாமல் போனது. கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, ஆதார் - பான் இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜூன் 30க்குள் இணைக்காவிட்டால் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த நேரிடும்.

இணைப்பது எப்படி?

வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html என்ற முகவரியில் நீங்களே உங்களுடைய ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க முடியும்.

ஆதார் எண் , பான் எண் இரண்டையும் அதில் கொடுத்த பிறகு ஆதார் அட்டையில் உள்ளது போலவே உங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு கேப்சா குறியீடு அல்லது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணை (OTP) பதிவிட்டு ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.

எஸ்.எம்.எஸ். மூலமாகவும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கலாம். ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து ’UIDPAN 12 டிஜிட் ஆதார் எண் 10 டிஜிட் பான் எண்’ என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

செக் பண்றது எப்படி?

பலருக்கு அவர்களது ஆதார் கார்டும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே தெரியாமல் இருக்கும். அதை அவர்களே மிக எளிதாக ஆன்லைன் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற லிங்க்கை ஓப்பன் செய்யவும்.

அதில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்களைப் பதிவிட வேண்டும்.

பதிவிட்ட பின்னர் view Link Aadhaar status என்பதை கிளிக் செய்தால் உங்களது பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்