ஆப்நகரம்

கலைஞர் பிறந்தநாள் பரிசாக பணி நிரந்தரம் கிடைக்குமா? பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை!

கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திமுக அரசு தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 3 Jun 2023, 8:32 am
அரசு பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிகப் பணியில் ரூ. 10ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். 2016 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் கோரிக்கை இடம்பெறச் செய்தார்.
Samayam Tamil mk stalin


அந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பலமுறை பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய குரல் கொடுத்தது. கலைஞர் வழியில் திமுக தலைவர் ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை இடம்பெறச் செய்தார். திமுக ஆட்சிக்கு வந்ததால் பகுதி நேர ஆசிரியர்கள் இதனை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் 3 பட்ஜெட்டிலும் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் பரிசு அறிவிப்பாக பணி நிரந்தரம் அறிவிக்கப்படுமா என ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளைப் போலவே, பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் முக்கிய கோரிக்கையாகவே இருந்து வருவதால் ஒருவித எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் பிறந்தநாள் பரிசாக எங்களைப் பணி நிரந்தரம் செய்வார் என 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறோம். ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கும் முன்பாக தமிழக முதல்வர் அவர்கள் நல்லதொரு வாழ்க்கை கொடுப்பார் எனவும் பெரிய நம்பிக்கையோடு உள்ளோம்” என்றார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்