ஆப்நகரம்

இ-பேமண்ட் மூலமாக விமான நிலைய கார் பார்க்கிங் கட்டணம்

இ-பேமண்ட் மூலமாக விமான நிலைய கார் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

THE ECONOMIC TIMES 27 Nov 2016, 10:14 pm
இ-பேமண்ட் மூலமாக விமான நிலைய கார் பார்க்கிங் கட்டணம் செலுத்தும் முறை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil pay your parking fee at airports digitally
இ-பேமண்ட் மூலமாக விமான நிலைய கார் பார்க்கிங் கட்டணம்


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு கடந்த 9-ம் தேதி முதல் வாபஸ் பெற்றது. இதனை தொடர்ந்து பணமற்ற பரிவர்த்தனை தொடர்பாக விவாதங்கள் அதிகளவில் தொடங்கையுள்ளனர். பிரதமர் , ஆர்பிஐ ஆளூநர் என அனைவரும் பணமற்ற பரிமாற்றத்திற்கு மாறவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

இந்தநிலையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ," ரூபய் நோட்டு வாபஸ் பெற்றதை அடுத்து விமான நிலையங்களில் இலவச கார் பார்கிங் சலுகை வருகிற நவம்பர் 28-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது.

இதனைதொடர்ந்து,நவம்பர் 29 தேதி முதல் விமானநிலையத்தில் கார் பார்கிங் வசதியை பயன்படுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை டெபிட் கார்டு, பேடியம், ப்ரீசார் உள்ளிட்ட இ-பேமண்ட் மூலமாக செலுத்தலாம். " என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்